தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சர் புகைப்படத்தை வணங்கி வித்தியாசமான போராட்டம் - Tamil latest news

லக்னோ: உத்தரப் பிரதேச ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை வணங்கி வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

Protest
Protest

By

Published : Jun 13, 2020, 7:02 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வசீம் அன்சாரி என்பவர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்திற்கு ஆரத்தி எடுத்து வணங்கி, வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”அதிகப்படியான விவசாயிகள் அவர்களது பண்ணைக்குச் செல்லும் சாலையை ஜி சர்ஜிபியார் தொழிற்சாலையின் உரிமையாளரால் தடுக்கப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த உரிமையாளர் சாலையின் மேல் தடுப்புச் சுவரை கட்டியுள்ளார்.

இந்த தடுப்புச் சுவர் மூலம் அவ்வழியாக செல்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் குரல் எழுப்பியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை கவனிக்குமாறு நான் அரசாங்க அலுவலர்களிடம் பலமுறை மன்றாடி கேட்டபோதும் எந்த பயனுமில்லை. எனவே யோகி ஆதித்யநாத் புகைப்படத்திற்கு ஆரத்தி எடுத்து வணங்க முடிவு செய்தேன். மேலும் எனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டால், நான் முதலமைச்சரின் இல்லத்தின் முன் நின்று எதிர்ப்புத் தெரிவிப்பேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்றால் மருத்துவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details