இஸ்லாமிய மதராசா ஆசிரியர் முகமது மொமின். இவர் இஸ்லாமிய மாணவர்களுக்கு மதம் தொடர்பான கல்வியை பயிற்றுவித்து வரும் ஆசிரியர் ஆவார்.
'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழங்கு! ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல் - ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழங்கு
டெல்லி: 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கமிடும்படி இஸ்லாமிய மதராசா ஆசிரியரை வெறித்தனமாகத் தாக்கிய மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த விவரங்களை கண்காணிப்புக் காணொலி (சிசிடிவி) மூலம் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
ஜூன் 20ஆம் தேதி காலை 8 மணியளவில், சொகுசு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் முகமது மொமினிடம்,ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கம் எழுப்பும்படி கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே, மொமினை சரமாரியாகத் தாக்கிய அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதனையறிந்த அப்பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த விவரங்களை கண்காணிப்புக் காணொலி உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.