தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முஹரம் ஊர்வலத்துக்கு இஸ்லாமிய குருமார்கள் அழைப்பு! - உச்ச நீதிமன்றம் தடை

முஹரம் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையில், “நீதிமன்ற உத்தரவை மதித்து கட்டுப்பாடுகளுடன் முஹரம் ஊர்வலம் நடத்த வேண்டும்” என்று இஸ்லாமிய குருமார்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Muharram All India Imam Organisation Supreme Court Muslim Clerics Imam Umar Ahmed Ilyasi Indian Muslims for progress and Reforms முஹரம் பண்டிகை உச்ச நீதிமன்றம் தடை இஸ்லாமிய குருமார்கள் அழைப்பு
Muharram All India Imam Organisation Supreme Court Muslim Clerics Imam Umar Ahmed Ilyasi Indian Muslims for progress and Reforms முஹரம் பண்டிகை உச்ச நீதிமன்றம் தடை இஸ்லாமிய குருமார்கள் அழைப்பு

By

Published : Aug 29, 2020, 9:05 PM IST

டெல்லி:முஹரம் ஊர்வலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை இஸ்லாமிய மதகுருமார்கள் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசி கூறுகையில், “"முஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததற்காக உச்ச நீதிமன்றமோ அல்லது அரசாங்கமோ அளித்த உத்தரவுகள் அனைவரையும் கரோனா வைரஸிலிருந்து காப்பாற்றுவதாகும்.

சமீபத்தில், கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் போதும், ​​இஸ்கான் கோயில் மூடப்பட்டது. இவ்வாறு கடந்த காலத்தில் ஒருபோதும் நடக்கவில்லை.
ஈத், பக்ரீத் மற்றும் பல்வேறு திருவிழாக்களும் தடைசெய்யப்பட்ட முறையில் கொண்டாடப்பட்டன. தற்போது கரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை நாம் கவனிக்கும்போது, நம்மை ​​நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது” என்றார்.

இதையடுத்து ஈடிவி பாரத்துக்கு அவர் பேட்டியளிக்கையில், “இந்து, முஸ்லீம், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் பண்டிகைகள் கொண்டாடப்படாதபோது, ​​முஹரம் விஷயத்திலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே, முஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பதற்கு பதிலாக, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், முஸ்லீம் சிந்தனைக் குழு முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்களுக்கான இந்திய முஸ்லிம்கள் கூறுகையில், "புனித முஹரம் மற்றும் சஃபர் மாதத்தை நினைவுகூரும் இந்த ஊர்வலம் மிக முக்கியமானது. ஆனாலும், தற்போது முன்னெச்சரிக்கையாக இருந்து உயிர்களை காப்பது முக்கியம்.

இதுவே இஸ்லாத்தின் கட்டாயச் செயல். நாம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், புத்திசாலிதனமாக நடந்துகொள்ள வேண்டும்” என்றனர்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, முஹரம் பண்டிகையின்போது, கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து 20 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட 20 நபர்கள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நபர் ஒருவருக்கு இடையே 6 மீட்டர் இடைவெளி கட்டாயம் என்றும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முஹரம் இஸ்லாமிய நாள்காட்டியின் முதல் மாதம் ஆகும். அஷுரா என்றும் அழைக்கப்படும் மாதத்தின் பத்தாம் நாளில், உலகெங்கிலும் உள்ள ஷியா முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் ஹுசைன் அலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர்.
​​கி.பி 680ஆம் ஆண்டு நபி பேரன் இந்த நாளில் கர்பலா போரின் போது, கலீப் யாசீத்தின் படையினரால் கொல்லப்பட்டார்.
மாதத்தின் முதல் 10 நாட்களில், ஷியா முஸ்லிம்கள், அலி மற்றும் அவரது இறந்த குடும்ப உறுப்பினர்களின் வலியை மீண்டும் உருவாக்க, தங்களை தாங்களே மார்பில் அடித்துக்கொள்வார்கள்.

சன்னி முஸ்லிம்கள் இதை எகிப்திய பார்வோன் மீது மோசே பெற்ற வெற்றியாகக் கருதுகின்றனர். முஹம்மது நபி மக்காவில் அஷுரா மீது நோன்பு நோற்பது வழக்கம், இது ஆரம்பகால முஸ்லிம்களுக்கு பொதுவான பாரம்பரியமாக மாறியது.

இதையும் படிங்க:முஹரம் ஊர்வலம் - காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details