தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் செதஸ்கோப் எடுத்த கன்னட இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்!

பெங்களூரு: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இசையமைப்பாளர் ஒருவர் மீண்டும் தனது மருத்துவ தொழிலுக்கு திரும்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

music director
music director

By

Published : Jul 8, 2020, 8:13 AM IST

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 489 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 815ஆகவும், உயிரிழப்பு 416ஆகவும் உயர்ந்துள்ளது.

உச்சபட்சமாக பெங்களூருவில் கரோனா எண்ணிக்கை 7ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கரோனா ஹாட் ஸ்பாட் நகரங்களில் ஒன்றாக உள்ள அம்மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை அதிகம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கன்னட, தெலுங்கில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரண், தொட்டம்பைலு படித்த மருத்துவராவர். இசை மீது கொண்ட தீரா பிரியத்தால் இசையமைப்பாளரானர். ஆனால் தற்போது கரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்களுக்கு lதன் மருத்து சேவை என்பதை உணர்ந்த அவர் மீண்டும் மருத்துவராக தற்போது பணியாற்ற தொடங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரின் இந்த முடிவை வரவேற்ற திரைத்துறை பிரபலங்கள் பலர் இவரை வெகுவாக பாராட்டிவருகிறார்கள்.

இதையும் படிங்க:'ஒரே நாள்ல கரோனா குணமாகனுமா எங்க கடை மைசூர்பா சாப்பிடுங்க' - சர்ச்சையைக் கிளப்பிய ஸ்வீட் கடை ஓனர்

ABOUT THE AUTHOR

...view details