புதுச்சேரியின் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரமூர்த்தி (71). காளான் வளர்ப்பில் 1997 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறார். கரோனா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு இலவசமாக தினமும் காளான் சூப் வழங்கி வந்தார்.
இந்த நிலையில் நம் நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியருக்கு மதிய உணவோடு சேர்த்து காளான் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பிறப்பித்த பிரதமர் மோடி மற்றும் வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித் துறை இணைச் செயலர் மீனா ஆகியோருக்கு சுந்தரமூர்த்தி நன்றியினை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு நன்றி கூறிய தேசிய விருது வென்ற ஆசிரியர் சுந்தரமூர்த்தி பிரதமரின் சாதனைப் பட்டியலில் இந்தச் சாதனையும் இடம்பெறும் என்று பெருமிதத்துடன் கூறும் சுந்தரமூர்த்தி, இதற்கான உத்தரவினை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பிறப்பித்து இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
புதுச்சேரி அரசும் மதிய உணவுத் திட்டத்தில் காளானை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சிறந்த காளான் உற்பத்தியாளருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தடுப்பூசியை கண்டுபிடிக்க பிரிட்டன் புது முயற்சி