தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், தான் வகித்து வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல். முருகனை தமிழ்நாடு பாஜக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட்டது.
'தொண்டர்களை அரவணைத்துச் செயல்படுவேன்' - எல். முருகன் இந்நிலையில் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய எல். முருகன் , "என்னை பாஜக தலைவராக நியமித்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட அனைத்து மூத்தத் தலைவர்களுக்கும் நன்றி.
பாஜகவில் சாதாரண தொண்டனாக இருந்த எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவிலுள்ள அனைத்துத் தொண்டர்களையும் அரவணைத்துச் செயல்படுவேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பாஜக புதிய தலைவருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!