இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு சட்டம் 370-ஐ நீக்கி, ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகியவற்றை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
இதையடுத்து இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே மாத்தூர் இருவரும் துணைநிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இன்றிலிருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வமாக யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்துள்ளன.