புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவில் பங்கேற்பதற்காக பிரபல ரவுடி சாணிகுமார் என்பவர் வந்திருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
பிரபல ரவுடி கொலை- கொலையாளிக்கு காவல்துறை வலைவீச்சு! - #pudhucherry
புதுச்சேரி: கோயில் திருவிழாவிற்கு வந்த பிரபல ரவுடியை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தனிப்படை காவலர்கள் தேடி வருகின்றனர்.
![பிரபல ரவுடி கொலை- கொலையாளிக்கு காவல்துறை வலைவீச்சு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4322854-1065-4322854-1567493635600.jpg)
இதில் தப்பித்து ஓடிய சாணி குமாரை அந்த நபர்கள் துரத்திகொண்டு சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். இது குறித்து முதலியார் பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கோவில் திருவிழாவில் ரவுடி கொலை செய்யபட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.