புதுவை நகராட்சியில் 350க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத இறுதி நாளன்று ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த மே மாத ஊதியத்தொகை போராட்டத்திற்குப் பிறகே அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஜூன், ஜூலை மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நகராட்சி வரி வசூல் செய்த பிறகே, அந்த நிதியில் இருந்து தங்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஊரடங்கின் போது வரி வசூல் காலதாமதமாவதால், ஊதியத்தையும் தாமதப்படுத்துவதாக நகராட்சி ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், தங்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, கம்பன் கலையரங்கில் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் இன்று(ஆகஸ்ட் 3) திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.