தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாதாந்திர சம்பளம் வழங்காததால் நகராட்சி ஊழியர்கள் போராட்டம்! - சம்பளம் வழங்க கோரி நகராட்சி ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி:சம்பளம் வழங்க கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் நகராட்சி ஊழியர்கள்
போராட்டத்தில் நகராட்சி ஊழியர்கள்

By

Published : May 14, 2020, 10:22 AM IST

புதுச்சேரி, புதுவை நகராட்சியில் 350-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத இறுதி நாளான்று சம்பளம் வழங்கப்படும். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் சம்பளம் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த மே 4ஆம் தேதி முதல் நகராட்சி தலைமை அலுவலகம் வளாகம் உள்ளே ஊழியர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் போராட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் புதுவை நகராட்சி கூட்டமைப்பு ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று உள்ளாட்சி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கூட்டமைப்பின் துணை தலைவர் இருசப்பன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் செயலாளர் பத்ரிஷ், தலைவர் விநாயகவேல், நிர்வாகிகள் அய்யப்பன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நகராட்சி ஊழியர்களின் இப்போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர் கண்ணன், உடனே அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு விரைவில் சம்பளம் வழங்குவதாக அவர்களுக்கு உத்தரவாதம் அளித்த பின்னரே, அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் போராட்டம்
இந்த போராட்டத்தின் காரணமாக புதுவை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரிவசூல், அலுவலக பணிகள் மற்றும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி, உள்ளாட்சித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:'சுகாதாரத் துறையின் அலட்சியம் தான் தமிழ்நாட்டில் கரோனா அதிகரிக்க காரணம்' - முன்னாள் அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details