மும்பை மார்வ் கடற்கரைக்கு நேற்று (ஜூன் 21) மாலை 5.30 மணியளவில் ஆறு சிறுவர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. மால்பானி பகுதியிலுள்ள அஸ்மி நகரைச் சேர்ந்த இச்சிறுவர்கள் கடலில் குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு சிறுவர்கள் கடலின் ஆழத்தில் சென்று குளிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அலைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அலைகள் அவர்களை மேலும் உள்ளே இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து மற்ற நான்கு சிறுவர்கள் காவல் துறைக்கு தகவல்கொடுத்தனர்.