தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.22 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 வெளிநாட்டவர்கள் கைது! - போதைப்பொருள் கடத்தல்

மும்பை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மூன்று வெளிநாட்டவர்களை மும்பை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

police
police

By

Published : Dec 4, 2020, 7:49 AM IST

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் போதைப்பொருள்கள் கடத்தல், சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காவல் துறை அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'மும்பை மண்டலத்தின் 11ஆவது காவல் துணை ஆணையர், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டுபிடிக்க சிறப்புக் குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவுக்கு கடந்த டிச. 02ஆம் தேதி நண்பகல் 1 மணியளவில் தெற்கு மும்பை, மலாட் பகுதியில் அமைந்துள்ள டொயோட்டா ஷோரூமில் உச்சே ஜேம்ஸ் (35) என்ற வெளிநாட்டவர் வந்து போதைப்பொருள்கள் விற்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், குழுவானது அங்கு விரைந்து சென்ற அந்த வெளிநாட்டவரிடமிருந்து 10.14 கிராம் மதிப்புள்ள போதைப்பொருள்களை கைப்பற்றியது.

இதையடுத்து பங்கூர் நகர் காவல் நிலையத்தில் வெளிநாட்டவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை வருகின்ற டிச. 07ஆம் தேதி, காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து குற்றவாளியை நேற்று (டிச. 03) விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், எமேகா சைப்ரியன், சுக்வ் ஜோசப் ஆகிய இரு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ராயல் பாம் கோரேகான் கிழக்கு மும்பை பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகத் தகவல் அளித்தார்.

ரூ.22 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 வெளிநாட்டவர்கள் கைது!

அத்தகவலின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல்செய்தது உள்பட மொத்த போதைப்பொருள்களின் அளவு 22.14 கிராம் ஆகும். இதன் மதிப்பு சுமார் 22 லட்சத்து ஆயிரத்து 400 ரூபாய் ஆகும்.

இதையும் படிங்க: ஜனவரி 1 முதல் ஊதியமில்லா விடுப்பு நீக்கம் - இண்டிகோ அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details