தமிழ்நாடு

tamil nadu

மும்பையில் ஒரு கோடி மதிப்புள்ள 4 லட்சம் முகக் கவசங்கள் பறிமுதல்!

By

Published : Mar 25, 2020, 10:35 PM IST

மும்பை : கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் முகக் கவசங்களை மும்பை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Mumbai police seize 4 lakh masks worth Rs 1 cr
கோவிட்- 19 : பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் முக கவசங்கள்!

கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் முகக் கவசங்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் முகக் கவசங்களுக்கு தற்போது உலகளவில் தேவை அதிகமாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வீரியமாகி வருகிறது. இந்நிலையில், அங்கு முகமூடிகளை பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி வருவது தொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல்நாள் தேடுதல் நடவடிக்கையில் 3 லட்சத்து 25 ஆயிரம் என்-90 வகை முக கவசங்கள் உட்பட 25 லட்சம் முகமூடிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒருகிடங்கிலும், தானேவின் பிவாண்டி நகரில் உள்ள ஒரு கிடங்கிலும் இருந்து மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர்.

நேற்றிரவு, வாரச் சந்தையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திர கேன் இருந்தபோது, ​​ சஹார் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சரக்கு வளாகக் கிடங்கில் மூன்று- அடுக்கு முகமூடிகளை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை துணை கண்காணிப்பாளர் (VIII) மஞ்சுநாத் ஷிங்கேவுக்கு அவர் தெரியப்படுத்தி உள்ளார்.

துணை கண்காணிப்பாளர் மஞ்சுநாத் ஷிங்கேவின் அறிவுறுத்தலின் பேரில், சோதனை குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஷா போக்குவரத்து கிடங்கில் சோதனை நடத்தியது. அப்போது, அங்கே 200 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 4 லட்சம் முகக் கவசங்கள் கண்டெடுக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றுநோயால் முகமூடிகளுக்கு தற்போது உலகளவில் அதிக தேவை இருப்பதால், இவற்றை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கோவிட்- 19 : பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் முகக் கவசங்கள்!

இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ”நாட்டின் இக்கட்டான நேரத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் முகமூடிகளை பதுக்கி வைப்பது அல்லது கடத்துவது போன்ற மோசடிகளைக் கண்டறிந்து அவற்றை மீட்டு தந்துள்ள காவல்துறையினர் இந்த முயற்சிகளை பாராட்டுக்குரியது” என்றார்.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடிய கும்பல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :கோவிட்-19 அச்சுறுத்தல்: என்.பி.ஆர். பணிகள் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details