தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளிகள் (டிஆர்பி) விவகாரம் தொடர்பாக மும்பை புறநகர் பகுதியான சண்டிவாலியில் வசிக்கும் ஹரிஷ் கம்லக்கர் பாட்டீல் (45) என்பவரை காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு (சிஐயு) கைது செய்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், அக்டோபர் 26ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டிஆர்பி மோசடி செய்வதற்காக பாட்டீல் சில தொலைக்காட்சி சேனல்களிலிருந்து பணம் பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
பாட்டீலுக்கும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய அபிஷேக் கோத்தாவாலுக்கும் இடையில் சில நிதி பரிவர்த்தனைகள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணை தொடங்கிய பின்னர், கோத்தவாலே தப்பிச் செல்ல பாட்டீல் உதவியதாக அந்த அலுவலர் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட சேனலைப் பார்க்க டிஆர்பி ரேட்டிங் மீட்டர் பொருத்தப்பட்டிந்த சில வீடுகளுக்கு லஞ்சம் கொடுக்க ஏதுவாக கோத்தவாலே பணத்தை விநியோகித்தார். பார்வையாளர்களின் தரவு சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அலுவலர் கூறினார்.
இதுதொடர்பாக, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை நிதி அலுவலர் எஸ்.சுந்தரம் மற்றும் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் ஆகியோரை கடந்த வாரம் சி.ஐ.யு விசாரித்தது.
விளம்பரதாரர்களை கவர்ந்திழுக்க சில சேனல்கள் டிஆர்பி எண்களை மோசடி செய்கின்றன என்று குற்றம் சாட்டி, மதிப்பீட்டு நிறுவனம் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (பார்க்) காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, போலி டிஆர்பி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
பார்வையாளர்களின் தரவுகளை சேகரிப்பதற்கான சில வீடுகளில் நிறுவப்பட்ட மீட்டர்களை கண்டறிந்து சில சேனல்களை தொடர்ச்சியாக பார்பதற்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: மூன்று மாதங்களுக்கு டிஆர்பியை வெளியிடப்போவதில்லை!