தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தீர்ப்பு வருவதற்கு முன்னரே சாய்க்கப்பட்ட 2,141 மரங்கள்! - latest national news

மும்பை: உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னரே 2,141 மரங்கள் வெட்டப்பட்டதாக மும்பை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

aarey colony

By

Published : Oct 7, 2019, 10:45 PM IST

Latest National News மும்பையின் நுரையீரலாகச் செயல்படும் ஆரே காலணி பகுதியில் உள்ள 2,656 மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுத, இன்று அது அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

முடிவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை மரங்களை வெட்ட தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் தற்போது மும்பை மெட்ரோ தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மெட்ரோ வெளியிட்ட அறிக்கையில், "தடைவருவதற்கு முந்தைய இரு நாட்களில் (சனி, ஞாயிறு) மட்டும் 2,141 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது, வெட்டப்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விரைவில் மெட்ரோ பணிகள் தொடங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பை மெட்ரோ நிர்வாகம் சார்பில் இதுவரை 23,846 மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் 25,000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பசுமை பட்டாசுகளுக்கும் நோ சொன்ன பிரகாஷ் ஜவடேகர்

ABOUT THE AUTHOR

...view details