அனில் சவுகனி என்னும் 43 வயது நிரம்பிய நபர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனின் 3 வயது நிரம்பிய மகளை, அவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பனின் மூன்று வயது மகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய நபர் கைது! - Man throws 3 year old baby
மும்பை: கொலாபா பகுதியில் தன் நண்பனின் மூன்று வயது மகளை ஏழாவது மாடியிலிருந்து வீசிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நண்பனின் மூன்று வயது மகளை மாடியில் இருந்து தூக்கி வீசிய நபர்
இதையடுத்து அவரே தானாக முன்வந்து காவல் துறையினரிடம் சென்று தான் செய்த தவறுக்காக சரணடைந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர், அவரை ஐந்து நாட்கள் காவலில் வைத்துள்ளனர்.
மேலும் அவர் மனநலம் குன்றியவர் என்று காவல் துறையினர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.
Last Updated : Sep 9, 2019, 10:53 AM IST