இந்தியாவில் கரோனா வைரஸ் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கரோனா வைரசின் கேந்திரமாகவே மாறியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரரின் எண்ணிக்கை 1,517ஆக அதிகரித்துள்ளது.
ஆன்லைனில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி - மும்பை குடிமகன்கள் மகிழ்ச்சி
மும்பை: கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய பிரஹன்மும்பை மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "மும்பையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் வீடுகளுக்கு மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மதுக்கடைகள் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் (இ-காமர்ஸ்) சேர்ந்து கூட மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம். ஆனால், கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படக் கூடாது. இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை சம்மந்தப்பட்ட வார்டு அலுவலர்கள், கலால் துறை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மது போதையில் தூய்மைப் பணியாளரை தாக்கியவர் கைது!