மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மன்கர்ட் - கோவண்டி ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள இருப்புப் பாதையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார். ரயில் மோதியதில் உயிரிழந்த அவரின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர், இறந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவரது பெயர் ஆசாத் என்றும், ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசையில் அவர் வசித்துவருவதாகவும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அவரது குடிசைக்கு காவலர்கள் சென்று பார்த்தபோது, பக்கெட் போன்ற பெரிய டப்பாக்களில் ரூ. 1.75 லட்சத்திற்கு சில்லரை காசுகளாக இருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.