தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளி மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது.! - மும்பை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

மும்பை: பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் காணொலி அனுப்பிய ஆசிரியரை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Mumbai coaching class teacher held for sexually harassing teen
Mumbai coaching class teacher held for sexually harassing teen

By

Published : Dec 1, 2019, 6:32 PM IST

மும்பையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் நிகில் தேவ். 37 வயதான நிகில் தேவ், அங்கு பாடம் பயிலும் 15 வயதான மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது நாளுக்கு நாளுக்கு அதிகரித்த நிலையில், தற்போது இரட்டை அர்த்த ஆபாச ஜோக்குகள் மற்றும் காணொலிகளை அனுப்பி வந்துள்ளார். இதை பொறுத்துக்கொள்ளாத மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் மும்பை புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் நிகிலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், அந்நிறுவனத்தில் பயிலும் மற்ற மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவி ஆசிரியர் மீது அளித்த புகாரில் கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் காணொலிகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: திருமண ஆசைக்காட்டி கல்லூரி பேராசிரியை பலாத்காரம்.!

ABOUT THE AUTHOR

...view details