தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடம் இடிந்து விபத்து: 5 பேர் பலி - 5 death

மும்பை: டோங்கிரி என்னும் பகுதியில் நூற்றாண்டு பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

mumbai

By

Published : Jul 16, 2019, 6:31 PM IST

Updated : Jul 17, 2019, 2:22 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டோங்கிரி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடம் முறையான பராமரிப்பின்றி இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்திருக்கக் கூடும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated : Jul 17, 2019, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details