மஹாராஸ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அணுஷக்தி நகரைச் சேர்ந்தவர் அனுஜ் திரிபாதி (37). இவர், பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞான அலுவலராக பணியாற்றி வந்தார்.
ஜன.28ஆம் தேதியன்று காலை குழந்தைகளுக்கு உணவளிப்பது தொடர்பாக திரிபாதிக்குஅவரது மனைவியுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மனவுளைச்சலில் இருந்த அவர் இரவு படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக் கண்ட அவரது மனைவி, உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால் ஒரு ஐந்து நிமிடம் இவர்களுடன் செலவிடுங்கள் அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் கணவன் தற்கொலை!