தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியல் பரபரப்புகளுக்கிடையே மும்பை தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு

மும்பை: அரசியல் பரபரப்புகளுக்கிடையே மும்பை தாக்குதலின் 11ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது.

Chief Minister Devendra Fadnavis pays homage to the flower ring
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

By

Published : Nov 26, 2019, 12:45 PM IST

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் பல இடங்களில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உள்பட 166பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இதன் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஹோட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஓபராய் டிரிடென்ட் ஹோட்டல், லியோஃபோல்டு கஃபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.

அஞ்சலி செலுத்தும் ஆளுநர் கோஷ்யாரி

பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவரை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர், பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 166 பேர் பலியாகினர்.

மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

மேலும் பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்புக்கு, உச்ச நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்து.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலின் 11ஆவது நினைவு தினமான இன்று தாக்குதலில் பலியானோர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மாநில ஆளுநர் கோஷ்யாரி, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மரியாதை செய்யும் காவல்துறையினர்

இதையும் படிங்க:மும்பை போலீஸ்தாம்பா சேப்ஃபு..! - சொல்கிறார் #பிக்பாஸ் மீரா மிதுன்

ABOUT THE AUTHOR

...view details