தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

110 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் - மோடி

டெல்லி: உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 110 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Aug 15, 2020, 1:28 PM IST

டெல்லி செங்கோட்டையில் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, தேசிய உள்கட்டமைப்பு குழாய் திட்டத்திற்காக 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படும் என தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "விரைவான உலகத்தில் நவீனமயமாக்களுக்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

தேசிய உள்கட்டமைப்பு குழாய் திட்டத்தின் மூலம் இது பூர்த்தி செய்யப்படும். இதற்காக 7,000க்கும் மேற்பட்ட திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய நேரம் வந்துவிட்டது. பல தரப்பு உள்கட்டமைப்பை இணைக்கும் நோக்கிலான பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சாலைகளை விரிவுப்படுத்தும் வகையில் தங்க நாற்கர சாலை திட்டம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளில் நாட்டின் இறையாண்மைக்கு சவால்விட்டவர்களுக்கு நம் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி அளித்தார்கள்" என்றார்.

இதையும் படிங்க: சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்த தேசிய இணைய சுகாதார திட்டம் - மோடி

ABOUT THE AUTHOR

...view details