கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி 115.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 21அடி உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் தற்போதைய நீர்மட்டம் 136.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுவதால், தமிழக பகுதிகளுக்கு விநாடிக்கு 2,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் தெரிவித்துள்ளார்.
அணையின் நீர்மட்டம் உயர்வதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ” முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 136.60 அடியை கடந்துள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தாலும் எந்தவித பாதிப்பும் இல்லை. அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின், பீர்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய தாலுகாக்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: '16 ஆண்டுகள்... 13 சிகரங்கள்': உலக சாதனை படைக்க காத்திருக்கும் கேரளாவாசி!