தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முலாயம் சிங் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிவிப்பு - அகிலேஷ் யாதவ் டிம்பிள் யாதவ்

லக்னோ : உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உ.பி முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Mualayam
Mualayam

By

Published : Aug 8, 2020, 4:18 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் நேற்று (ஆக. 8) மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

லக்னோவில் உள்ள மேடாண்டா மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். உத்தரப் பிரதேத்தின் முன்னாள் முதலமைச்சரும், முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்தனர்.

முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து மேடான்டா மருத்துவமனையின் மருத்துவர் ராகேஷ் கபூர் கூறுகையில், ”முலாயம் சிங்கிற்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகிறார். கோவிட் -19, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு கோவிட்-19 தொற்று ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

80 வயதான முலாயம் சிங்கின் உடல் நலன் சீராகவுள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர் ராகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'அலைபேசியும் இல்ல, நெட்வொர்க்கும் இல்ல' - பழங்குடியின குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் ஆன்லைன் கல்வி!

ABOUT THE AUTHOR

...view details