தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்தார்புர் போல் பல பாதுகாப்பு வழித்தடங்கள் தேவை - தேவை

ஸ்ரீநகர்: கர்தார்புர் போல பல பாதுகாப்பு வழித்தடங்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவாக விரும்புகிறேன் என முஃதி கூறியுள்ளார்.

பல

By

Published : Mar 20, 2019, 10:38 AM IST

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முஃதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நட்பு மலர கர்தார்புர் போல் பல பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்தார்புர் பாதுகாப்பு வழித்தடம் திறந்ததை தான் வரவேற்பதாகவும், இது போல் ஜம்மு, சியாலகோட்டில் அமைய விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இது இரு நாட்டிடையே வணிகம் வளர உதவும் எனவும், பகையை குறைக்க முயற்சிக்கும் எனவும் தெரிவித்தார்.

மோடியை விமர்சித்து பேசிய முஃதி, இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக காவலாளி பிரதமராக இருக்கிறார் எனவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் தான் நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி ஆகியோர் நாட்டை மோசடி செய்து கோடிக் கணக்கான பணத்தை கொள்ளையடித்தார்கள் என குற்றம்சாட்டினார்.


ABOUT THE AUTHOR

...view details