நடப்பு காரீப் பருவச் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பருவப் பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்துவருகிறது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் ஜார்க்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கு 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை 487.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆண்டில் இதே காலத்தில் 390.56 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் கொள்முதல் 24.93 விழுக்காடு அதிகம். இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு காரீப் பருவச் சந்தைக் காலத்தில் 62.28 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.92,120.85 கோடி பெற்றுள்ளனர்.