தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரிவின் விளிம்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்! - சிறு,குறு தொழில் நிறுவனம்

டெல்லி: சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari
MSME sector on verge of collapse: Gadkari

By

Published : May 8, 2020, 10:46 AM IST

சியாம் நிறுவனத்துடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான போரில் ஈடுபட்டுள்ளனர். எம்எஸ்எம்இ பிரிவுகளுக்கு மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது.

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் முடிந்த வரையில் ஒரு மாத காலத்திற்குள் சிறு,குறு தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விரைவில் விடுவிக்கவும், அவ்வாறு இல்லை என்றால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்."ரோலிங் ஃபண்ட்" அமைப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுத்துவருகிறோம். சிறு, குறு நிறுவனங்கள் தங்களது மூலதனத்தைப் பெற ரோலிங் ஃபண்ட் உதவியாக இருக்கும்.

சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒத்துக்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த நிதியை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாகவும், நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் கூறினார்.

இதையும் பார்க்க: வெள்ளை மாளிகை ஊழியர்கள் அனைவருக்கும் தினமும் கரோனா பரிசோதனை...!

ABOUT THE AUTHOR

...view details