குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. தொடர்பாக டெல்லி காவல் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் ரந்தாவா, "இதுவரை 56 காவலர்கள், 136 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தலைமைக் காவலர் ரத்தன் லால் இந்த வன்முறையில் உயிரிழந்திருக்கிறார், டிசிபி ஷாதராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
டெல்லி வன்முறை - ‘144 தடை, மக்கள் அமைதி காக்க வேண்டும்’ - சிஏஏ வன்முறை
டெல்லி: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக டெல்லி காவல் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர், '144 தடைவிதிக்கப்பட்டுள்ளது, மக்கள் அமைதி காக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
MS Randhawa
மேலும் அவர், "வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம். மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ட்ரோன்களின் உதவியுடன் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. தற்போது சட்ட ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது" என்றார்.