தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மலேரியாவை ஒழிக்க கூட்டணி அமைத்த எம்.பி.க்கள்!

டெல்லி: 2030ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை முழுவதுமாக ஒழித்துக் கட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைத்துள்ளனர்.

Parliament
Parliament

By

Published : Feb 10, 2020, 11:22 PM IST

மலேரியாவை 2030ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழித்துக் கட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து குழு ஒன்றை அமைத்துள்ளனர். பாஜகவின் கே.ஜே. அல்போன்ஸ், பிரபாகர் கோர், விகாஷ் மகாத்மே, சஞ்சய் ஜெய்ஸ்வால், காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகோய், பிஜு ஜனதா தளத்தின் அமர் பட்நாயக் உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'Parliamentarians for Malaria Elimination' என இந்தக் குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மலேரியாவை ஒழித்து கட்டும் வகையில், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நோயை முழுவதும் ஒழித்துக் கட்ட, பல்வேறு துறையின் ஒத்துழைப்புப் பெறுவதற்கும் இந்தக் குழு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.ஜே. அல்போன்ஸ் கூறுகையில், "2030ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி பூண்டுள்ளது. இந்த குறிக்கோளை அடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பெரிய பங்காற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்பை பெற்று நாட்டிலிருந்து மலேரியாவை முழுவதுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:‘பாலியல் சீண்டலுக்கு உள்ளானோம்’ - கல்லூரி மாணவிகள் கதறல்

ABOUT THE AUTHOR

...view details