தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு லைட், ஒரு ஃபேன்: ரூ.1.25 லட்சம் கரண்ட் பில்; அதிர்ந்துபோன பெண்மணி!

போபால்: வீட்டில் ஒரேயொரு மின்விளக்கும், மின் விசிறி மட்டும் வைத்திருக்கும் பெண்மணிக்கு ரூ.1.25 லட்சம் மின்கட்டணம் வந்துள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

Bill
Bill

By

Published : Jul 23, 2020, 9:25 AM IST

கரோனா பாதிப்பு ஒரு பக்கம் சமானியர்களின் வாழ்க்கையை வாட்டிவதைத்துவரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 'கரண்ட் பில்' மூலம் பெரும் சோதனை வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்னா பகுதியைச் சேர்ந்த துல்சா சோதியா என்ற பெண்ணுக்குத்தான் இந்த சோதனை ஏற்பட்டுள்ளது.

இவரது வீட்டில் ஒரேயொரு மின்விசிறி, மின்விளக்கு மட்டுமே உள்ளது. மாதம் ரூ.100-150 வரை மின் கட்டணம் வருவதுதான் வழக்கம். இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குக்குப் பிந்தய மூன்று மாத காலத்திற்கான மின்கட்டணம் அவருக்கு கணக்கிடப்பட்டு, அந்தப் பில்லை மின்வாரிய ஊழியர்கள் துல்சாவுக்குத் தந்துள்ளனர்.

அந்தப் பில்லில் ரூ.1.25 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பில்லைப் பார்த்து துல்சா பேரதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டித்துவிடுவோம் எனவும் கூறியுள்ளனர். உடனே இந்த விவகாரம் அப்பகுதி மின்வாரிய செயற் பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தவறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்திருக்கும் எனவும், திருத்தப்பட்ட கட்டணத்தை விரைந்து வழங்குவோம் எனவும் செயற் பொறியாளர் ஆர்.கே பாண்டே உறுதியளித்துள்ளார். இதையடுத்து துல்சா சோதியா சற்று நிம்மதியடைந்தார்.

இதையும் படிங்க:பரபரப்பான கட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியை சந்தித்த உள்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details