கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இரவு, பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூரின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து டெல்லிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இருப்பினும், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.