தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுத்தம் என்பது நமக்கு! சுத்தம் உள்ள நாடாளுமன்றம்தான்! - ஹேமமாலினி புதிய அவதார் - anurag thakur

டெல்லி: பாலிவுட் நடிகையும் மதுரா நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

ஹேம மாலினி புதிய அவதார்

By

Published : Jul 14, 2019, 7:02 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலிவுட் நடிகை ஹேமமாலினி. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே இவரது செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் பெரிதும் கலாய்க்கப்பட்டது

ஹேம மாலினியை கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட்

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தை மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், மதுரா எம்.பி ஹேமமாலினி ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்தனர். அப்போது அமைச்சர் அனுராக் தாக்கூர் சேவாக்கை போல சகட்டுமேனிக்கு துடப்பத்தைச் சுழற்ற, ஹேமமாலினியோ நமது பியுஷ் சாவ்லா போல துடப்பத்தைப் பிடிக்கவே மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிதும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ஸ்வச் பாரத் திட்டத்தை விடுங்கள், தற்போது முக்கியமாக ஹேமமாலினிக்கு ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் துடப்பத்தைப் பிடிப்பதைக் கற்றுத்தர வேண்டும் என்று கலாய்த்துள்ளார்

ABOUT THE AUTHOR

...view details