நாடு முழுவதும் மாட்டிறைச்சியின் பெயரில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதில் அதிகமாக தாக்கப்படும் மக்கள் சிறுபான்மையினர் ஆவர். முக்கியமாக இந்த சம்பவங்கள் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்துள்ளது என அரசு சாரா தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மாட்டிறைச்சியின் பெயரில் நடக்கும் வன்முறையைத் தடுக்க நடவடிக்கை!
போபால்: மாட்டிறைச்சியின் பெயரில் நடக்கும் வன்முறையைத் தடுக்க மத்தியப் பிரதேச அரசு புதிய சட்டத்தை இயற்றவுள்ளது.
நடந்த வன்முறைகளில் 50 விழுக்காடுக்கு மேலாக பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளது எனவும், வன்முறைகளில் இறந்தவர்களில் 86 விழுக்காடு இஸ்லாமியர்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாட்டிறைச்சியின் பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை மத்தியப் பிரதேச அரசு இயற்றவுள்ளது.
மாட்டிறைச்சிக்கு மொத்தமாக தடைவிதித்த சட்டத்தில்தான் இந்த சட்ட திருத்தத்தை மத்தியப் பிரதேச அரசு கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.