உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்குக் நாள் வேகமடைந்து வரும் அதன் பரவலைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் அது தொடர்பான வதந்திகள் பரப்பப்படுகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகளுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை பரிசோதித்து, உறுதிப்படுத்தி உள்ளதாக கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது. இது அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கால்நடை வளர்ப்புத் துறை இயக்குநர் ஆர்.கே. ரோக்டே, "கோழி முற்றிலும் பாதுகாப்பானது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.