மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (85) காய்ச்சல், சுவாசம் மற்றும் சிறுநீர் கழித்தலில் பிரச்னை ஏற்பட்டதால், அவர் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜுன் 11ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உடல்நலம் தேறி வரும் மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் - lalji health condition
லக்னோ: சுவாசப் பிரச்னையால் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன், தற்போது உடல் நிலம் தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
mp-governer-lalji-tandon
தற்போது, அவர் உடல்நலம் தேறி வருவதோடு, அவரின் சிறுநீரகம் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், லால்ஜிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அதிமுகவினர்!