தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பரப்புரையில் ம.பி., முதலமைச்சரை விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்குப்பதிவு! - அசோக்நகரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம்

போபால்: பரப்புரையின் போது மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை தரம் தாழ்த்தி பேசியதாக காங்கிரஸ் விவசாய அமைப்பு தலைவர் தினேஷ் குர்ஜார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

in a
inws

By

Published : Oct 15, 2020, 4:58 PM IST

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 3ஆம் தேதி 28 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதற்கான, தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூரில் உள்ள அசோக்நகர் பகுதியில் காங்கிரஸ் விவசாய அமைப்பு தலைவர் தினேஷ் குர்ஜார் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை பேசினார். அதில், தற்போதைய முதலமைச்சர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால், முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் மிகப்பெரிய தொழிலதிபர் எனத் தரம் தாழ்த்தும் விதமாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். பரப்புரையில் தினேஷ் பேசிய காணொலியை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ததின் அடிப்படையில், கச்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் முடிவுகள் தான் ஆளும் பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியை தீர்மானிக்கும் என்பதால் பாஜகவினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details