மத்தியப் பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தின் ராம்புரியா (Rampuria) கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதாகக் காவலர் ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கிராமத்திற்கு விரைந்த காவலர், கடை திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாகக் கடை திறந்தவரைக் கண்டித்தது மட்டுமின்றி, மதுபானம் வாங்குவதற்கு கடைக்கு முன்பு கும்பலமாக நின்றவர்களிடம் தனிநபர் இடைவெளி குறித்து விளக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த குடிமகன்கள், காவலரை ஆயுதங்களால் தாக்கி கடைக்குள் சிறைவைத்தனர்.