மத்தியப் பிரதேசம் மாநிலம் பியோரா தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கோவர்தன் டாங்கி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மனைவி மற்றும் மகனுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார்.
காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்தன் டாங்கி கரோனாவால் உயிரிழப்பு! - காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்தன் டாங்கி கரோனாவால் உயிரிழப்பு
போபால்: மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கோவர்தன் டாங்கி, கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
dangidangidangi
அதில், கரோனா தொற்று உறுதியானதால் போபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கோவர்தன் டாங்கி சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 15) உயிரிழந்தார். அவரின் மறைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.