சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான ஆட்கொல்லி கரோனா நோய்க் கிருமி, உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி, உயிர் பலி வாங்கி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மத்தியப் பிரதேச முதலமைச்சருக்கு கரோனா உறுதி! - Shivraj Singh Chouhan
12:19 July 25
போபால்: மத்தியப் பிரதேச முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில் கரோனா தடுப்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அதிகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தருணத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை காணொலி மூலமாக நடத்தவுள்ளதாகவும், கரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.