கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகியது. மெட்ராஸ் பிரெசிடென்சியில் அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதன் 64ஆவது ஆண்டை முன்னிட்டு, கேரள மாநிலத்திற்கு ராகுல் காந்தி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்லும் கேரளா - ராகுல் பாராட்டு - கேரளா
டெல்லி: ஜனநாயக மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநாட்டியபடி வளர்ச்சியின் பாதையில் முன்னோக்கி செல்ல கேரளாவை வாழ்த்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரளா மாநிலம் உருவாக்கப்பட்டு 64 ஆண்டுகளான நிலையில், மலையாள மக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஜனநாயக மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநாட்டும் படி கேரளா வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்புகிறேன். கேரளாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
கேரளா உருவாக்கப்பட்டு 64 ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.