தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிலிண்டர் வெடித்து தாய், குழந்தைகள் உயிரிழப்பு - mother with two children killed in gas cylinder blast

சத்தீஸ்கர் : சண்டாய் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து 25 வயது தாய் இரு குழந்தைகளுடன் உயிரிழந்தார்

blast
blast

By

Published : Jun 1, 2020, 5:17 PM IST

சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 25 வயது பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த லதா சாஹு (வயது 25), அவரது மகன்களான டிக்கேஷ் (வயது 7), ஜலக் (வயது 3) ஆகியோர், சண்டாய் கிராமத்தில் அமைந்துள்ள இவர்களது வீட்டில் இருந்த நிலையில், இன்று காலை எட்டு மணியளவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் இவர்களது வீடு கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க :திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு அனுமதி - மகாராஷ்டிரா அரசு

ABOUT THE AUTHOR

...view details