கரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியால், இந்தியா முழுவதும் கடந்த வாரம் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வரும் பீகார் பாகல்பூரைச் சேர்ந்த திப்பு யாதவ் என்பவர் புலம் பெயர்ந்த தொழிலாளி. இந்நிலையில் இவரது தாயார் அவரது சொந்த ஊரில் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தனது கிராமத்திற்குச் செல்ல உதவுமாறு அழுது கொண்டிருக்கிறார்.
பின் இது குறித்து அவர் ஏ.என்.ஐவிடம் கூறியதாவது; "என் அம்மா இறந்துவிட்டார். இந்த ஊரடங்கு உத்தரவால், நான் இங்கே சிக்கிக்கொண்டேன். நான் இப்போது என் கிராமத்திற்குச் செல்லவேண்டும். நான் ஏழை, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று கூறினார். மேலும் என் தந்தையும், எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிராமத்தில் எனக்காக காத்திருக்கின்றனர் என்றார். ஒரு வாகனம் என்னை என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று இறக்கிவிடும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.