ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் ரூபனகுடி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் அம்மாநிலத்தைச் சேர்ந்தப் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வருகை தரும் மருமகனின் மதிய உணவிற்காக 67 வகை கொண்ட உணவினை சமைத்துள்ளார்.
அதில் பல வகைப் பொறியல்கள், குழம்பு வகைகள், இனிப்பு வகைகள், நொருக்குத் தீனிகள், கேக், உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன. தற்போது அந்தக் காணொலி அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.