ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தின் முஸ்தபடா கன்னாவரம் மண்டலில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தவர் அங்கம்மா. இவர் தன் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்துக் கொடுத்து, தானும் அதை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அங்கம்மாவின் இளைய மகன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மூத்த மகனான சங்கர், தாய் அங்கம்மா ஆகிய இருவரையும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.