கிழக்கு டெல்லியின் புது அசோக் நகரில் நேற்று காலை சுமிதா (65 )மற்றும் அவரது மகள் சம்ரிதா (25) இருவரும் அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரில் தாய்,மகள் கொலை - டெல்லி புதிய அசோக் நகரில் தாய்,மகள் கொலை
டெல்லி: புது அசோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பேர் சுமிதா வீட்டிற்குள் நுழைந்து வெளியே வரும் காட்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமிதாவின் கணவர் இறந்துவிட்ட நிலையில் சுமிதா, அவரது மகள் இருவரும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இப்படி ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பிரதமரை திட்டிய முதியவருக்கு சிறை