கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாட்டிலுள்ள தினக்கூலி தொழிலாளர்களும் ஆதரவற்ற ஏழைகளும் தங்கள் அன்றாட உணவுக்கே தடுமாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கடக்கில் ஆதரவற்ற பெண் ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் உண்ண உணவின்றி பிரதான சாலை ஒன்றில் கடந்த சில நாள்களாக அமர்ந்து அழுதுகொண்டிருப்பது காண்போரை வேதனையின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது.
கொப்பல் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ரத்னவ்வா எனும் இந்தப் பெண் ஊரடங்கைத் தொடர்ந்து தன் வீட்டிலிருந்த அத்தியாவசியப் பொருள்கள் தீர்ந்ததால், உதவி ஏதேனும் கிடைக்குமா என எதிர்ப்பார்த்து வீட்டைவிட்டு குழந்தைகளுடன் வெளியேறியுள்ளார்.