மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அவுரங்கபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். அப்பெண்ணை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிக்சை அளித்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தனர். ஆனால், தாய்க்கு கரோனா இருப்பதால் அவர் பெற்ற குழந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
தான் பெற்ற குழந்தையைப் பார்க்க வேண்டும் என மருத்துவர்களிடம் அப்பெண் கோரிக்கை வைத்தார். குழந்தையைப் பார்க்க முடியாமல் தாய் படும் வேதனையைப் புரிந்துகொண்ட மருத்துவர் ஒருவர் செல்போன் காணொலி அழைப்பு மூலம் தாயை குழந்தையிடம் பேச முயற்சி எடுத்தார்.