குஜராத் மாநிலம் கிசர், ஜூனாகத் மாவட்டங்களில் பயிரிடப்படும் மாம்பழங்களில் கேசர், கேசரி வகைகள் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. இதற்கு ஒரு படி மேலாக ஜூனாகத்தில் பால்செல் கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் பாய் என்னும் விவசாயி, தனது தோட்டத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த மாம்பழங்களின் வகைகளைப் பயிரிட்டு அசத்தியுள்ளார். இந்த மாம்பழங்கள் அடுத்த சில ஆண்டுகளில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகளவில் விலை உயர்ந்த மாம்பழம் ஜப்பானில் தான் விளைகிறது. ஆனால், இந்தியாவில் பயிரிடப்படும் மாம்பழத்தின் கேசர் வகை, ஜப்பானிய மாம்பழ வகையின் சுவையை விட சிறிதுதான் குறைவாக இருக்கும். இந்த மாம்பழங்கள் அடுத்த சில ஆண்டுகளில் விற்பனைக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.