தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீடு: அதன் விலை உங்களை ஆச்சரியப்படுத்தும்!

இந்த ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு மும்பையில் விற்கப்பட்டது. லோயர் பரேலில் உள்ள அந்த வீட்டை தொழிலதிபர் ஒருவர் ரூ. 136 கோடியே 27 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.

most expensive flat sold in mumbai
most expensive flat sold in mumbai

By

Published : Jun 28, 2020, 9:04 PM IST

Updated : Jun 28, 2020, 10:25 PM IST

மும்பை: சில ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையின் பி.கே.சியில் குடிசை வீடு ஒன்று, ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிறிய குடிசையின் விலை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இதன் பிறகும் கரோனா காலங்களில் விலையுயர்ந்த வீடுகளின் விற்பனை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், இந்த ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு மும்பையில் விற்கப்பட்டது. லோயர் பரேலில் உள்ள அந்த வீட்டை 136 கோடியே 27 லட்சத்துக்கு தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

இந்த கரோனா முடக்க காலங்களில் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியை சந்தித்து வந்தாலும், இதுபோன்ற ஒரு பெரிய பரிவர்த்தனை கட்டுமானத் துறையின் நம்பிக்கையின் கதிராக நிரூபிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மிகவும் விலையுயர்ந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்கிய தொழிலதிபர்கள் நீரஜ் கோச்சர் மற்றும் கனிகா துருவ் கோச்சர் ஆவர்.

இந்தியாவின் முன்னணி எஃகு உற்பத்தி நிறுவனமான விராஜ் புரஃபைல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக நீரஜ் கோச்சர் உள்ளார். கரோனா பொது முடக்கம் வரும் இரண்டு நாட்களுக்கு முன் இந்த வீட்டிற்கான பதிவை இவர் மேற்கொண்டுள்ளார்.

லோயர் பரேலின் இந்தியா புல்ஸ் கட்டுமான நிறுவனத்தில், கோச்சார் குடும்பத்தினர் 4 குடியிருப்புகளை வாங்கியுள்ளனர். இதன் மொத்த பரப்பளவு 21,004 சதுர அடியாகும். வீடு சதுர அடிக்கு ரூ. 64 ஆயிரத்து 878 என்ற விகிதத்தில் விற்கப்படுகிறதாம்.

இந்த வீடுகளுக்கு முன்தொகையாக 8 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கமாக செலுத்தியுள்ளது. முன்னதாக, நீரஜ் பஜாஜ் 2018ஆம் ஆண்டில் ரூ. 120 கோடியில் ஒரு வீடு வாங்கியிருந்தார்.

ஆர்.கே. ஸ்டுடியோவின் மிகப்பெரிய பரிவர்த்தனை 2019ஆம் ஆண்டில் 250 கோடி ரூபாய்க்கு அது விற்கப்பட்டது. இப்போது கோச்சார் குடும்பம் மேற்கொண்ட ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை, 2020இன் முதல் ஆறு மாதங்களில் மேற்கொண்ட பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 28, 2020, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details